தொகுதி மறுசீரமைப்பு.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு மூலம் வடமாநிலங்களில் உள்ள தொகுதிகள் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தெளிவாக கூறவில்லை என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மாநிலங்களுக்கும் சரிசமமான உரிமையை கொடுக்க வேண்டுமென்பதே திமுகவின் கோரிக்கை என குறிப்பிட்டார். இதற்காகதான், அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் பழிவாங்கும் போக்கிற்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான முடிவுகளை தருவார்கள் என அவர் தெரிவித்தார்.
Next Story
