முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார்.
முதலமைச்சராகிறார் உத்தவ் தாக்கரே
Published on

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுநர் பகத்சிங் கோரியாரியை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அளித்துள்ளனர். நாளை நடக்க உள்ள நிகழ்ச்சியில், உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். முன்னதாக டிசம்பர் 1 ஆம் தேதி பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com