TVK | சென்னையில் திடீர் பரபரப்பு.. தவெக உறுப்பினர் கைது
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நியாய விலை கடை ஊழியர்களை தாக்கிய தவெக உறுப்பினர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் ஸ்மார்ட் கார்டு இல்லாமல் பொருட்களை கேட்ட போது அதனை வழங்க மறுத்த ரேஷன் கடை ஊழியர்களான டேனியல் மற்றும் கலையரசனை, வழக்கறிஞரும் தவெக உறுப்பினருமான விஜய் மற்றும் பிரதீப் சரமாரியாக தாக்கியுள்ளனர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
