"இதே நாளில் தான்.."வரலாற்றை புரட்டி முதல்வர் போட்ட அதிரடி டிவீட்

x

தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் 6, 1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை முதலமைச்சர் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 1967 : அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!, தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகைதனைச் சூடிடுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்