விஜய் சொன்ன வார்த்தை.. அதிர்ந்த அரங்கம்-உள்ளே புகுந்த ரசிகர்களால் பதறிப்போன பவுன்சர்கள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜய் வெள்ளை சட்டை வேஷ்டியுடன், இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்து நிகழ்ச்சியில் எளிமையாக பங்கேற்றார்.
இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய விஜய், மாமனிதர் நபிகள் நாயகத்துடைய வாழ்க்கையின்படி மனித நேயத்தையும் சகோதரத்துவத்தையும் பின்பற்றி வாழும் அனைவரும் என்னுடைய அழைப்பை ஏற்று வந்ததில் பெரும் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இஸ்லாமியர்களுடன் தொழுகை செய்த விஜய், நோன்பு கஞ்சியை குடித்து நோன்பை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் 2,000 பேர் உணவருந்தும் வகையில், மட்டன் பிரியாணி, நோன்பு கஞ்சி தயார் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் விஜய்யை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் களேபரமானது. மேலும், விஜய் நிகழ்ச்சியை முன்னிட்டு ராயப்பேட்டை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
