"பாஜக - தவெக இடையே உறவு...கேட்காமலேயே விஜய்-க்கு அடித்த ஜாக்பாட்" - அமைச்சர் பரபரப்பு பேட்டி

x

த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவதன்மூலம், பாஜகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே உறவு இருப்பது தெளிவாகிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில், போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் தா.மோ அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜகவுக்கும் த.வெ.க.வுக்கும் இடையே உறவு இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்