"விளம்பரத்திற்காக த.வெ.க தலைவர் விஜய் பேசி வருகிறார்" - அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் | TVK Vijay
விளம்பரம் தேடுவதற்காக தவெக தலைவர் விஜய் திமுக ஆட்சியை குறை கூறுவதாக அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி, திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் மகளிருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, தமிழ்நாட்டில் பெண்களுக்கான ஆட்சி நடைபெறுவதாகவும், பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஊடகத்தில் விளம்பரம் தேடுவதற்காக விஜய் பேசி வருவதாகவும் குறிப்பிட்டார்.
Next Story
