TVK | Vijay | ஒவ்வொருத்தராக டேட்டா எடுக்கும் விஜய்.. வெளியாக போகும் மெகா லிஸ்ட்

x

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களின் விவரங்களை சேகரிக்க தமிழக வெற்றிக் கழகம் விண்ணப்பங்களை வழங்கியுள்ளது.

விரும்புவதற்கான காரணங்கள், வெற்றி வாய்ப்பு நிலவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக தலைமைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

முந்தைய கட்சி விவரங்கள், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தில் ஆற்றிய பணிகளின் விவரங்களையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை ஏதாவது தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், அது தொடர்பான விவரங்கள் மற்றும்

வேட்பாளரின் சொத்து மதிப்பு, முகவரி உட்பட முழு சுய விவரத்தை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பார்த்தபின் வேட்பாளர் பட்டியலை த.வெ.க தலைவர் விஜய் இறுதி செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 2 பேரிடம் விவரங்கள் சேகரிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்