TVK Vijay | Vellore Vijay Poster | தவெக தலைவர் விஜய்க்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பதற்றம்

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டில் தவெக தலைவர் விஜயை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பான சூழல் நிலவியது.கரூரில் நடந்த கூட்ட நெரிசலுக்கு விஜய்தான் காரணம் எனவும், அவரை கைது செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாணவர் சங்கத்தினர் போஸ்டர் ஒட்டினர். அப்போது, அங்கு வந்த தவெக தொண்டர்களுக்கும், மாணவர் சங்கத்தினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.இதை அடுத்து 50க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்