Tvk Vijay | Sengottaiyan | KAS-க்கு தவெகவில் பெரிய பதவி - வெளியான அதிமுக்கிய தகவல்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் தொகுதிகளில் இருந்து மொத்தம் 9 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.இதையடுத்து, அவரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருந்தார்.அதைத் தொடர்ந்து, பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையனும் பங்கேற்றதால்,அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருந்தார்.இந்நிலையில் தலைமை செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.அதைத் தொடர்ந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு சென்ற செங்கோட்டையன், விஜய்யுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று தவெகவில் இணைகிறார்.சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காலை 10 மணிக்கு இணைப்பு விழா நடைபெறும் நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்களும் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ அசனா ஆகியோரும் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளனர்
