விஜய் அமைக்க போகும் வியூகம் - பம்பரமாக சுழலும் என்.ஆனந்த்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு மற்றும் ஆண்டு விழா, மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். பொதுக் குழுவில் கலந்து கொள்ளும் 2 ஆயிரத்து 500 பேருக்கு சைவ, அசைவ உணவு வகைகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பொதுக் குழுவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஹோட்டல் வளாகத்தில் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்