TVK Vijay | Chennai | அன்று சொன்னபடியே இன்று செய்து காட்டிய தவெகவினர்

x

தவெக முதல் மாநாட்டிற்கு சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் சார்பாக வீடு கட்டி கொடுக்கவுள்ள நிலையில், அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கடந்தாண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக முதல் மாநாட்டிற்கு சென்னை கீழ்ப்பாக்கத்திலிருந்து சென்ற சார்லஸ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தவெக சார்பில் வீடு கட்டி தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வீடு கட்டும் பணிகளுக்கான பூமி பூஜையில், தவெக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் குமார், உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்