TVK Vijay | Arunraj | Banner | அகற்றப்பட்ட பேனர் - தவெக அருண்ராஜ் சரமாரி கேள்வி

x

பேனர் அகற்றம் - நகராட்சி ஊழியர்களுடன் தவெக நிர்வாகி வாக்குவாதம்

திருச்செங்கோட்டில் தவெக சார்பில் பேனர் அகற்றப்பட்டதால், நள்ளிரவில் நகராட்சி ஊழியர்களுடன் தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டத்தை வரவேற்று தவெக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை, அனுமதியின்றி வைத்ததாக நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். இதையறிந்த தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் தனது கட்சியினருடன் உடனடியாக அங்கு விரைந்து சென்று, எந்த விதியின் கீழ் பேனர் அகற்றப்பட்டது என கேள்வி எழுப்பி, நகராட்சிஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், நகராட்சி ஊழியர்களால் கீழே இறக்கப்பட்ட பேனர், மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்