பேனர்கள் அகற்றம்.. தவெகவினர் அதிர்ச்சி

x

சென்னை அருகே மாங்காட்டில் தவெக நிர்வாகிகள் வைத்த பேனர்களை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரிடம் அனுமதி பெற்று தவெகவினர் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான பேனர்கள் வைத்திருந்த நிலையில், அதிக அளவில் பேனர்களை வைத்துள்ளதாக கூறி அவற்றை போலீசார் அகற்றினர். பாதுகாப்பான முறையில் சாலை ஓரத்தில் பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், போலீசார் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும் தவெகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்