முதல்முறையாக போராட்ட களத்தில் தவெக தலைவர் விஜய் - `டிக்’ அடிக்கப்பட்ட இடம்
ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகாமையில் விஜய் வருகை தந்து மக்களை சந்திக்கக்கூடிய இடத்தினை தேர்வு செய்து ஏகனபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சமன்படுத்தும் மற்றும் அப்பகுதியில் உள்ள முற்களை அகற்றும் பணியில் போராட்ட குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குறிப்பாக தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஏகனாபுரத்திற்கு வருகை தந்து தேர்வு செய்யப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டு வருகிறார்
பரந்தூர் விமான நிலையம் வருவதற்கான திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்
போராட்டக் குழுவினரை ஆதரித்து தமிழக வெற்றிக்காக தலைவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில்
விஜய் வருகை தந்து மக்களை சந்திக்க கூடிய இடத்தினை தேர்வு செய்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சமன்படுத்தும் பணியில் போராட்டக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை தமிழக கட்சி கழகத்தின் பொதுச்செயலாளர் பார்வையிட்டு வருகிறார்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ள திட்டத்தை அறிவித்த நாள் முதல் அப்பகுதியில் விமான நிலையம் வந்தால் விளைநிலங்களையும், குடியிருப்புகளையும், நீர்நிலைகளையும் அழிந்து போகும் என்பதால் இந்த நாள் வரை இரண்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
ஆனால் விமான நிலையம் திட்டம் வரக்கூடிய அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஆனது மேற்கொண்டு வருகிறது. ஏகனாபுரம் மக்களை ஆதரித்து பல கட்சித் தரப்பினர் பறந்து பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடக்கூடிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் ஆனது வெளியாகி இருந்தது இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற 19, 20ஆம் தேதியில் சந்திக்க இருப்பதாகவும் அதற்கான காவல்துறை பாதுகாப்பினை அணுக வேண்டும் என தாவை கட்சியினர் காவல்துறையை அணுகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் அய்யநாதன், ஜெகதீஸ்வரர் ஆகிய இருவரும் விமான நிலைய போராட்ட குழுவினரிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை அருகாமையில் விஜய் வருகை தந்து மக்களை சந்திக்கக்கூடிய இடத்தினை தேர்வு செய்து ஏகனபுரம் அம்பேத்கர் சிலை அருகே 5 ஏக்கர் பரப்பளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை சமன்படுத்தும் மற்றும் அப்பகுதியில் உள்ள முற்களை அகற்றும் பணியில் போராட்ட குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் குறிப்பாக தற்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஏகனாபுரத்திற்கு வருகை தந்து தேர்வு செய்யப்பட்ட இடத்தினையும் பார்வையிட்டு வருகிறார்