தருமபுரியில் தவெகவினர் கைது - பரபரப்பு காட்சிகள்

x

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுங்கச்சாவடியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். கர்த்தாரஅள்ளியில் புதிதாக தொடங்கப்பட்ட சுங்கச்சாவடியில் வாக்குறுதிகளை மீறி சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக த.வெ.க-வினர் குற்றம்சாட்டியுள்ளனர். சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சுங்கச்சாவடியை நூற்றுக்கும் மேற்பட்ட த.வெ.க தொண்டர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்