தவெக-வில் சாதி பார்த்து பதவி? கொந்தளித்த தொண்டர்கள் | TVK Vijay
தவெக-வில் சாதி பார்த்து பதவி? கொந்தளித்த தொண்டர்கள் | TVK Vijay
தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகிகள், திருவண்ணாமலை மேற்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட உள்ள மாவட்ட செயலாளர், தனது உறவினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும், தவெகவில் சாதி மற்றும் பணம் பார்த்தே பதவிகள் வழங்கப்படுவதாகவும், கட்சி தலைமையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
Next Story