TVK | "அடுத்த 5 மாதம்..." அனல் பறக்க விட்ட என்.ஆனந்த் பேச்சு - ஆர்ப்பரித்த தவெக தொண்டர்கள்

x

"அடுத்த 5 மாதம்..." அனல் பறக்க விட்ட என்.ஆனந்த் பேச்சு - ஆர்ப்பரித்த தவெக தொண்டர்கள்

விக்ரவாண்டி மாநாட்டுக்கு பிறகு தமிழகத்தில், தமிழக வெற்றிக்கழகம் தான் எதிர்கட்சியாக இருப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் நடக்கவிருக்கும் தவெக-வின் இரண்டாம் மாநாட்டுக்காக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆனந்த், 234 தொகுதியிலும் விஜய் தான் வேட்பாளர் எனவும், வரும் ஐந்து மாதமும் கடுமையாக உழைத்து, 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜயை வெற்றிபெறச் செய்து முதல்வராக்க வேண்டும் என பேசினார். இதில் ஏராளமான தவெக-வினர் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்