TVK Stampede | CBI | L Murugan | "சிபிஐ விசாரணையை நாங்க மட்டும் கேக்கல"
"சிபிஐ விசாரணையை நாங்க மட்டும் கேக்கல"
மத்திய அமைச்சர் எல் முருகன் பரபரப்பு பேச்சு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பல்வேறு உண்மைகள் புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள் என்று தெரிவித்தார். சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும் என்று மக்கள் நம்புவதாகவும் அவர் கூறினார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கியிருக்கும் சுற்றுப் பயணம், திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் பயணமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
Next Story
