TVK Protest | கார்களை குறுக்கே நிறுத்தி தவெகவினர் திடீர் போராட்டம் - போலீசுடன் மாறி மாறி வாக்குவாதம்

x

சாலையின் குறுக்கே கார்களை நிறுத்தி தவெகவினர் போராட்டம்

சேலம் மாநகரில் முக்கிய சாலையின் குறுக்கே கார்களை நிறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் மக்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தங்கள் கார்களை அப்புறப்படுத்துவோம் என தவெகவினர் போராட்டம் நடத்தினர். போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களால், சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சிலர் கூறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்