TVK | Madurai | தவெக மா.செ.வுக்கு எதிராக வெடித்த போராட்டம் - நடந்தது என்ன? பரபரக்கும் மதுரை

x

தவெக மா.செ.வுக்கு எதிராக வெடித்த போராட்டம் - நடந்தது என்ன? பரபரக்கும் மதுரை

மதுரையில், தவெக வடக்கு மாவட்ட செயலாளரான கல்லாணை விஜயன்பன், ஜாதி, மதம் பார்த்து பதவி வழங்குகிறார் என்றும், லட்சக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு நிர்வாகிகளுக்கு பதவி வழங்குகிறார் என்றும் கூறி, பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர் பெண்களை உருவக் கேலி செய்து பேசுவதாகவும், மூத்த அமைச்சர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தாமல், கைது நடவடிக்கைக்கு பயந்து, கட்சிப் பணியாற்றுவதில்லை என்றும் கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர், கல்லாணை விஜயன்பன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த கல்லாணை விஜயன்பன், புகார் தெரிவித்த அந்த பெண் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று தெரிவித்தார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்