TVK Madurai Manadu | மதுரை மாநாடு.. காவல்துறை கேட்ட கேள்விகள் - நேரில் வந்த புஸ்ஸி ஆனந்த்
தவெக மாநாடு - காவல் துறை கேள்விகளுக்கு ஆனந்த் நேரில் விளக்கம்
மதுரையில் நடைபெறும் தவெக மாநாடு குறித்து, காவல் துறை தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திருமங்கலம் ஏஎஸ்பி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நேரில் விளக்கம் அளித்தார். காவல் துறை சார்பில் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் வந்திருந்த ஆனந்த், அதற்குரிய விளக்கத்தை அளித்திருந்தார். மேலும், கட்சி வாகனங்கள் செல்லும் பாதைகள், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதி ஏற்பாடுகள் போன்ற கேள்விகளுக்கு அவர் மீண்டும் ஏஎஸ்பி அலுவலகத்தில், ஏஎஸ்பி அன்சுல் நாகரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் பதில் அளித்தார்.
Next Story
