"தவெக மலிவான அரசியல் செய்கிறது.." செல்வப்பெருந்தகை விமர்சனம்

x

தமிழக வெற்றிக்கழகம் மலிவான அரசியல் செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் தீ விபத்தில் எரிந்து சேதமான குடிசைகளை நேரில் பார்வையிட்ட அவர், தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை , விபத்தை விபத்தாக பார்க்க வேண்டும் என்றும், இதனை அரசியலாக்க முயலக் கூடாது என்றும் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பான இடமும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்