TVK | தவெக வேட்பாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார் - லீகல் டீமோடு இறங்கி அதிரவிட்ட மனைவி
பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது, பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது முற்றிலும் பொய்யான புகார் என பிரகாசத்தின் மனைவி மற்றும் தவெக மகளிர் அணியினர் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளராக பிரகாசம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மீது தவெக மகளிர் அணி நிர்வாகியான சங்கீதா என்பவர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்தார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியின் போது பிரகாசம் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், இது குறித்துக் கட்சித் தலைமையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சங்கீதா குற்றம்சாட்டினார். இந்நிலையில், பிரகாசம் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டிருப்பதாக, அவரது மனைவி மற்றும் திருவள்ளூர் மாவட்ட தவெக மகளிர் அணியினர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
