TVK | Jagannath Misra | சர்ச்சில் விசிலுடன் TVK வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சர்ச்சில் விசிலுடன் TVK வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

TVK | Jagannath Misra | சர்ச்சில் விசிலுடன் TVK வேட்பாளர் வாக்கு சேகரிப்பு அங்கே வந்த அதிமுக வேட்பாளரை ஆரத்தழுவி வரவேற்பு #Cumbum #TVK #JaganNathMisra தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஜெகன்நாத் மிஸ்ரா அதிரடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உத்தமபாளையம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டுப் பிரார்த்தனைக்கு வந்த மக்களிடம், விசில் சின்னத்திற்கு ஆதரவு கோரித் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் எனக் கூறி ஜெகன்நாத் மிஸ்ரா வாக்குகளை சேகரித்தார். விண்ணரசி மற்றும் சி.எஸ்.ஐ தேவாலயங்களில் பேராயர்களுக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார். மேலும் பிரசாரத்தின் போது அங்குத் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் விசில்களை ஊதி உற்சாகமாக வரவேற்றனர். வாக்கு சேகரிப்பின் போது, அதிமுக வேட்பாளர் எஸ்.டி.கே ஜக்கையனும் அங்கு வருகை தந்த நிலையில், இருவரும் பரஸ்பரமாக கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com