டங்ஸ்டன் விவகாரம்.. ``விதை போட்டுவிட்டு நாடகமாடுகிறார்கள்'' - தமிழிசை விமர்சனம்

x

பரந்தூர், ஹைட்ரோ கார்பன், நீட், டங்ஸ்டன் உள்ளிட்டவற்றுக்கு தி.மு.க விதை போட்டுவிட்டு மக்களிடம் நாடகமாடுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தவறான புரிதல் தமிழகத்தில் உள்ளதாகவும், திமுக கூட்டணி கட்சிகள் தவறான கருத்தை முன்னெடுப்பதாகவும் குறை கூறினார். டங்ஸ்டன் விவகாரத்தில் பத்து மாதம் சும்மா இருந்துவிட்டு, தி.மு.க எதிர்ப்பு மட்டுமே தெரிவித்ததாக தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்