டங்ஸ்டன் சுரங்க விவகாரம் - அதிரடி காட்டிய திருமாவளவன் | Tungsten Mining | Thirumavalavan | ThanthiTV

x

டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து மனு அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என உறுதியளித்ததாக திருமாவளவன் தமது சமூகவலை பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தனது பார்வைக்கு வந்ததாகவும், அத்துடன், தமிழ்நாட்டு மக்களோடு நாங்கள் இருப்போம், கவலை வேண்டாமென்றும் அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சருடனான சந்திப்பு ஆறுதல் அளிப்பதாக இருந்தது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்