"கட்சிப் பதவிகளில் எந்தவித மாற்றமும் இல்லை" - டிடிவி தினகரன்

சசிகலாவை சந்தித்தார், டிடிவி தினகரன்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடந்து முடிந்த தேர்தலில் 500-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் அமமுகவுக்கு ஒரு வாக்குகூட பதிவாகாதது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்படும் என்றார். அமமுக பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சி

சரியாக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 1ம் தேதி கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தினகரன் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com