மதுரை ஆதீனம் கருத்து - தினகரன் விளக்கம்...

அ.தி.மு.க. உடன் இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் கருத்து - தினகரன் விளக்கம்...
Published on
அ.தி.மு.க. உடன் இணைக்க எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். இது குறித்து, மதுரை ஆதீனம் வெளியிட்ட கருத்துக்கு பதில் அளித்த அவர், தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறினார். அ.தி.மு.க. இணைப்பு குறித்து, மதுரை ஆதீனம் தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையொன்றில் டி.டி. வி. தினகரன் எச்சரித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com