

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம், தினகரன் விண்ணப்பித்துள்ளார்.
சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'கட்சியை பதிவு செய்யத் தயார்' என்று தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,அமமுக இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கையாக சமீபத்தில், தினகரன் அமமுகவின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தினகரன் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் குறித்து தேர்தல் ஆணையம் இன்றே முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.