புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக அமைப்பு செயலாளர்கள் இரண்டாம் கட்ட பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
Published on

புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக அமைப்பு செயலாளர்கள் இரண்டாம் கட்ட பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

கழக பொருளாளர் வெற்றிவேல், வடசென்னை வடக்கு பகுதிக்கும், சந்தானகிஷ்ணன் வடசென்னை தெற்கு பகுதிக்கும், தென்சென்னை வடக்கு பகுதிக்கு சுகுமார் பாபுவும், நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் எம்எல்ஏக்கள் வீரபாண்டி செல்வம், சிவராஜ், துரைசாமி, வானூர் கணபதி ஆகியோர் கழக அமைப்பு செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், பாண்டுரங்கன், முன்னாள் எம்பிக்கள் கோபால், குமாரசாமி, நராயணன் மற்றும் முன்னாள் மேயர் சாருலதா தொண்டைமான் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com