பத்மநாப சுவாமி கோவில் நவராத்திரி பூஜை - நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, சாமி சிலைகள் மற்றும் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன.
பத்மநாப சுவாமி கோவில் நவராத்திரி பூஜை - நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் பங்கேற்பு
Published on

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்காக, சாமி சிலைகள் மற்றும் உடைவாள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து கேரளாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டன. அவற்றை வழியனுப்பும் விழா விமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிலைகள் மற்றும் உடைவாளை பெற்றுக்கொண்டனர். இதை அடுத்து பலத்த பாதுகாப்புடன் சிலைகள் மற்றும் உடைவாள் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு புறப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com