TRB Rajaa | அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சொன்ன வியக்க வைக்கும் தகவல்

தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு நிறுவனமான டிட்கோ தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்... முதல் கட்டமாக “அக்னி கூல்” மற்றும் “ராப்டி” ஆகிய 2 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தலா 25 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அக்னி கூல் நிறுவனம் ராக்கெட் தயாரிப்பிலும், ராப்டி நிறுவனம் DC மோட்டரில் இயங்கும் மின்சார வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் தொழில் வளர்ச்சி பரவலாக ஏற்பட்டு வருவதாகவும், 2021 ஆம் ஆண்டில் 2,045 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில் தற்போது 13 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் “Product Nation Tamil Nadu” என்ற நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், வேளாண் தொழில் மற்றும் டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் ஊக்குவிக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com