Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.10.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • குமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது...மழையால் 20க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது...
  • தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் வாகனங்களால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது... 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன...
  • சென்னை ஆழ்வார்பேட்டையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்... பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயல்படவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்...
  • மாநிலம் முழுவதும் தான் பயணிக்கும்போது, தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியிருப்பதை பார்ப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்...தமிழ்நாடு யாருடன் போராடும்? என திமுகவின் வாசகத்தை குறிப்பிட்டு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்...
  • மக்களுக்கு இடையூறாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.... கரூர் மக்களுக்கான உதவிகளை செய்து கொடுக்க தவெகவினரை விஜய் வலியுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது....


Next Story

மேலும் செய்திகள்