Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • கரூர் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்யை நோக்கி செருப்பு வீசப்பட்டதன் பிரத்யேக வீடியோ தந்தி டிவிக்கு கிடைத்துள்ளது...விஜய் மீது செருப்பு, தண்ணீர் பாட்டில், தேங்காய் வீசப்படுவதும், கூட்டத்தை கலைத்து மயங்கியவர்களை மீட்கும் பரபரப்பு காட்சிகளும் வெளியாகியுள்ளன...
  • உத்தரகாண்ட்டில் நடக்கும் தேசிய கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க டெல்லி சென்றதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்...அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்...
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை தயங்குவது ஏன் என, விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்...விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்தது... காலையில் 560 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில், அதே அளவு அதிகரித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்