tnelection2026 | இனி ரெஸ்ட்டே இல்ல.. களத்தில் இறங்கி அதிரவிடும் சீமான்

tnelection2026 | இனி ரெஸ்ட்டே இல்ல.. களத்தில் இறங்கி அதிரவிடும் சீமான்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திங்கட்கிழமை அன்று திருத்தணியில் இருந்து தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை, கடந்த மாதமே நாம் தமிழர் கட்சி அறிவித்தது. இந்நிலையில், சீமான் திங்கள்கிழமை அன்று, திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, வருகிற மார்ச் 28ம் தேதி வரை பல மாவட்டங்களில் ஆறு நாட்கள் தொடர்ந்து இடைவிடாது பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரத்தில், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்று ஆதரவு அளிக்குமாறு கட்சி தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com