TN vs Andhra| தயாநிதி மாறன் சொன்ன வார்த்தை.. தேவையின்றி தமிழகத்தை ஒரண்டை இழுத்த ஆந்திர எம்பி

TN vs Andhra| தயாநிதி மாறன் சொன்ன வார்த்தை.. தேவையின்றி தமிழகத்தை ஒரண்டை இழுத்த ஆந்திர எம்பி

தயாநிதி மாறன் சொன்ன வார்த்தை.. தேவையின்றி தமிழகத்தை ஒரண்டை இழுத்த ஆந்திர எம்பி

தமிழகத்தை கிண்டல் செய்த ஆந்திர எம்பி லவு ஸ்ரீ கிருஷ்ணா தமிழ்நாடு அனைத்தையும் எதிர்ப்பதால்தான் தொழிற்சாலைகள் எல்லாம் ஆந்திராவுக்கு வந்து கொண்டிருக்கிறது என தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிண்டல் அடித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது... மக்களவையில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் திருத்தச் சட்ட மசோதா மீதான விவாதத்தில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய அங்கமான தெலுங்கு தேசம் கட்சி முழு ஆதரவை அளித்துள்ளது. மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய தெலுங்கு தேசம் கட்சி எம்பி லவ் ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, மத்திய அரசுக்குச் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது குறுக்கிட்ட பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறினார் இதற்குப் பதிலடி கொடுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்பி, தமிழ்நாடு எல்லாவற்றையும் தடை செய்ய விரும்புகிறது, அதனால் தான் அனைத்துத் தொழிற்சாலைகளும் ஆந்திராவிற்கு வருகின்றன, அதற்கு நன்றி என நகைச்சுவையாகப் பதிலளித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com