தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்
தமிழகத்தில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்பு
Published on
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்புக்களை வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், மினி கிளினிக்குகளின் எண்ணிக்கையை அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுமக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, கவனமாக இருக்க வேண்டும் எனக் ஒ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com