TN Govt |Ex ministers|"முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர விரைந்து அனுமதி"தமிழக அரசு வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் கோப்புகளை விரைந்து பரிசீலிக்க ஆளுநரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறையின் அனுமதி கோப்புகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த கோப்புகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குமாறு ஆளுநர் அர்லேகரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று ஆளுநரை நேரில் சந்தித்தபோது இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். போக்குவரத்துதுறையில் வேலைக்கு பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீதும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
