TN Governor Arlekar Speech| ``IAS, IPS என யாராக இருந்தாலும்..’’ - TN ஆளுநர் அதிரடி
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற பொறியியல் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர் அர்லேகர், பாரம்பரிய அறிவையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நல்லது மற்றும் அரசியல்வாதி என்பது தற்போது நேர் எதிர் வார்த்தைகளாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் அரசியல்வாதிகள் என எந்தப் பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்படுவதே மிகவும் அவசியமானது என்றார். மேலும், மகாபாரதம் ஒரு புராணக் கதை அல்ல, அது நம்முடைய வரலாறு என்றும், உத்யோக பர்வம் மூலமாக 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொழில் நேர்த்தி நமக்குத் பரீட்சயமாகியுள்ளதால், இந்தியாவின் பாரம்பரிய அறிவையும் நவீன பொறியியல் தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
#tngovernor #arlekarspeech #thanthitv
