TN Election | Chennai | தேர்தல் புறக்கணிப்பு? - 200 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு
TN Election | Protest | தேர்தல் புறக்கணிப்பு? - 200 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு #election2026 #protest #chennai #thanthitv தேர்தல் புறக்கணிப்பு? - 200 வீடுகளில் கருப்புக் கொடி கட்டிய மக்கள் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கூறி சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட துரைப்பாக்கம் பகுதியில், 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடியை கட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறிஞர் அண்ணா நகரில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த இடம் முழுவதும் ஒரு நபரின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வீடுகளைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகப் பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் தங்களுக்குத் தனித்தனியாகப் பட்டா வழங்காவிட்டால், தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
