TN Election 2026| தமிழக தேர்தல் ரிசல்ட்.. டெல்லி கொடுத்த `சிக்னல்’

தமிழக தேர்தல் ரிசல்ட்.. டெல்லி கொடுத்த `சிக்னல்’

தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமையும் என பியூஷ் கோயல் நம்பிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில், மதுரையில் பாஜக முகவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பெரும்பான்மையுடன் தாங்கள் ஆட்சி அமைப்போம் எனக்கூறிய அவர், இதில் சந்தேகம் இருந்திருந்தால் டெல்லியிலிருந்து தான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன் என தெரிவித்தார். திமுக அரசு வெளியேறும் நேரம் வந்துவிட்டதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்

X

Thanthi TV
www.thanthitv.com