TN Election2026 | "சாதனைகளோ.. கொள்கைகளோ இல்லாததால்.." - முதல்வர் போட்ட பரபரப்பு ட்வீட்

TN Election2026 | "சாதனைகளோ.. கொள்கைகளோ இல்லாததால்.." - முதல்வர் போட்ட பரபரப்பு ட்வீட்

எதிர்க்கட்சியினர் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார்.. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் சாதனைகள் மற்றும் அவற்றால் மக்களுக்கு கிடைத்த பயன்களை தரவுகளுடன் தாங்கள் விளக்கிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் மற்றொரு தரப்பிடம் சாதனைகளோ..செயல்படுத்தும் கொள்கைகளோ இல்லாததால் ஆபாசங்களையும் அவதூறுகளையும் மட்டுமே பரப்பி வருகின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கானது என்பதை மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்றும், வளர்ச்சியை தரும் பாதையையே மக்கள் தேர்வு செய்வார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com