TN Election 2026 | "Full Control.." - 24 மணி நேரமும் செயல்படும் மத்திய கட்டுப்பாட்டு அறை

TN Election 2026 | "Full Control.." - 24 மணி நேரமும் செயல்படும் மத்திய கட்டுப்பாட்டு அறை

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் மத்திய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும், பொதுமக்கள் அளிக்கும் தகவல்களை உடனுக்குடன் பெறவும், அவசர சூழ்நிலைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இந்த மையம் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் வாகன சோதனை மற்றும் பொதுக் கூடங்களில் கண்காணிப்பு மேற்கொள்கின்றன. நிலையான குழுக்கள் கிடங்குகளில் சோதனை நடத்துகின்றன. நெடுஞ்சாலைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும்,சட்டவிரோத பரிசுப் பொருட்கள் குறித்து தகவல் இருந்தால் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com