சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை விவாதம் - உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது.
சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை விவாதம் - உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கின்றனர்
Published on

தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் கூடுகிறது. தொழிலாளர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறைக்கான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் நிலோபர் கபீல், வளர்மதி ஆகியோர் பதிலுரை வழங்குகின்றனர்.

பின்னர் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உறுப்பினர்கள் பேச உள்ளனர். அப்போது கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் எழுப்பபடும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். பின்னர் தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிடுகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com