2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு - டிசம்பர் இறுதியில் பா.ஜ.க பேச்சுவார்த்தை என தகவல்

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து, அ.தி.மு.கவுடன் இந்த மாத இறுதியில் பா.ஜ.க பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு - டிசம்பர் இறுதியில் பா.ஜ.க பேச்சுவார்த்தை என தகவல்
Published on

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதிருந்தே தொடங்கியுள்ளன. வேட்பாளர் தேர்வு , கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சப்தமின்றி நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் தமிழக பா.ஜ.க இந்த மாத இறுதியில் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகிய தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், முக்கிய முடிவுகளை எடுக்கவும் தனிக் குழு ஒன்றை நியமிக்க பா.ஜ.க தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் 5பேர் கொண்ட முக்கிய நபர்களும் தேசிய நிர்வாகிகள் தலைமையில் 3பேர் என 8பேர் கொண்ட பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com