TN Assembly | காலனி பெயர் நீக்கம் -"சாய்பாபா காலனியை எப்படி அழைப்பீர்கள்.."-சட்டப் பேரவையில் விவாதம்

x

அரசு ஆவணங்களில் இருந்து காலனி என்ற சொல்லை நீக்குவதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணை தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றது. கோவையில் உள்ள சாய்பாபா காலனி, என்ஜிஓ காலனி ஆகிய பெயர்களில் உள்ள காலனியை அகற்றிவிட்டு எப்படி அழைப்பீர்கள் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மதிவேந்தன், காலனி என்ற வார்த்தை பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததால்தான் அப்பெயரை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்தார். சாய்பாபா காலனி என்ற சொல் அவமதிக்கும் வகையில் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் மதிவேந்தன், வடமாநிலங்களை போல் இங்கும் பிரிவினையை பரப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்