TN Assembly 2025 | பரபரப்பான அரசியல் சூழலில் அதிர போகும் தமிழக சட்டப்பேரவை
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. முதல் நாளான இன்று, மறைந்த உறுப்பினர்கள், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள், மறைந்த ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், கேரள முன்னாள் முதல்வர் சுதாகர் ரெட்டி, நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல.கணேசன், ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து பேரவை ஒத்தி வைக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத் தொடரில் கரூர் சம்பவம், கிட்னி திருட்டு விவகாரம், இருமல் மருந்தால் ஏற்பட்ட மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதால், பேரவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
