``நட்ட நடுரோட்டில் பெண்ணுக்குள் ஆண்..?'' ஊரையே பதற வைத்த `சரக்கு சாந்தி'... அதிர வைத்த மாந்திரீகம்
பெரும்பாலும் பேய் ஓட்டுற சடங்க கோவில்லயும், காட்டு பகுதிகளிலும் தான் செய்வாங்க. ஆனா இங்க ஒரு சாமியார் பப்ளிக் பிளேசுல வைச்சி பேய் ஓட்டி பொது மக்கள மிரள வைச்சிருக்காரு...
கொக்கு ஒரு ஃபுல்லு, கோழி ஒரு ஃபுல்லு என , ஸ்டார் ஓட்டலில் ஆடர் செய்வது போல, வடிவேலு பேசும் இந்த காமெடி வசனங்களுக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
பேய் பிடித்ததாக நடித்து, வயிறு முட்ட ஃபுல்கட்டு கட்டும் இந்த சீனை நடு ரோட்டில் ரீ கிரியேட் செய்து பொதுமக்களை பதற வைத்த சாமியாரின் பேய் ஓட்டும் உற்சவம் தான் இது.
பெண் உடம்பில் ஆண் பேய் புகுந்து விட்டதாகவும், அதை ஓட்டுவதற்காக பீர் வாங்கிக் கொடுக்கிறேன் என பிளாட்பாரத்தில் அலப்பரை செய்த இந்த சாமியாரின் பெயர் பழனி.
திருத்தணி காந்தி ரோடு 2வது தெருவில் உள்ள தெருவாசிகளை கடந்த சில நாட்களாகவே அமானுஷ்ய பீதியில் உரைய வைத்திருக்கிறார் இந்த பழனி சாமியார்.
வாடகைக்கு ஒரு கடையை எடுத்து பில்லி சூனியம், எடுப்பது பேய் ஓட்டுவது என பிளாக் மேஜிக் பில்ட்டப்புகளை கொடுத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் சம்பவத்தன்று சாமியாரை தேடி ஒரு பெண் பேய் ஓட்டுவதற்காக வந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணுக்குள் ஆண் பேய் இருப்பதாக சொன்ன, சாமியார் அதன் ஆசைக்கு இனங்க பீடி, பீர், பிரியாணி என கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
இது போன்ற பேய் ஓட்டும் சடங்குகள் கிராமபுரங்களில் நடக்கும் ஒன்று தான் என்றாலும், பெரும்பாலும் கோவில்கள், காட்டுபகுதிகளில் தான் இது நடக்கும்.
ஆனால் பழனி சாமி, மொதுமக்கள் நடமாடும் இடத்தில் அமரவைத்து பேய் ஓட்டுகிறேன் என வித்தை காட்டியது அந்த வழியாக நடந்து சென்றவர்களை பதறவைத்திருக்கிறது.
இதில் ஹலைட்டான விசயம் என்னவென்றால் , சாமியார் பீரை ஊற்றிக் கொடுத்ததும், அந்த பெண் உடம்பில் இருந்த பேய் நீ சாப்பிட்டியா என பாசமாக கேட்டிருக்கிறது.
பப்ளிக் பிளேசில் வைத்து இப்படி பாசமாக பேய் ஓட்டிய காட்சியை பார்த்தவர்களுக்கு, இது பழனிசாமியின் பப்ளிசிட்டி ஸ்டன்ட்டாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.