Tirupati | சுதந்திர தின விழா மேடையில் ஆந்திர அமைச்சர் திடீரென மயக்கம்.. பரபரப்பு
Tirupati | சுதந்திர தின விழா மேடையில் ஆந்திர அமைச்சர் திடீரென மயக்கம்.. பரபரப்பு திருப்பதியில் நடைபெற்ற சுதந்திர தின விழா மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆந்திர அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. திருப்பதி காவல் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆந்திர அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மேடையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர், திடீரென இரத்த அழுத்தம் (BP) குறைந்ததால் மயங்கிச் சாய்ந்தார். அப்போது, அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அமைச்சரைப் பிடித்து அசம்பாவிதத்தைத் தடுத்தனர். மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக மேடையிலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அனைவரும் நிம்மதியடைந்தனர்.
